வாழ்த்துக்கள்

'' வாழ்த்துக்கள் ''


அன்புக்கு விழைகிறாய்
அடிமைதனம் மறுக்கிறாய்

உரிமைகள் கேட்கிறாய்
திருமணம் மட்டும் வெறுக்கிறாய்
ஏன் ..?

மணம் கொள்
மனம் வெல்

உனக்கான உறவு வரும்
உலகம் உனக்காகும்

உரிமைகள் பெரிதாகும்
உணர்வு கொள்

உன்னவன் எவனென்று
தேடு
தேடிப்பெறு

கோடி நன்மையோடு
வாழ்
வாழ்த்துக்கள் .....!


வினோ வி ......!

எழுதியவர் : வினோ வி (24-May-17, 7:21 pm)
சேர்த்தது : வினோ வி
Tanglish : vaalthukkal
பார்வை : 607

மேலே