பெண்ணே நீ தான் இவ்வையகத்தில் என்றும் உயர்ந்தவள்

பத்து மாதங்கள் வயிற்றில்
உன் சிசுவை சுமக்கின்றாய்
அது தரும் வலிகள் அத்தனையும்
பெண்ணே நீ ஒரு போதும்
துன்பம் என்று சிணுங்கியதும் இல்லை
இன்ப வலி என்றே கூறுவாய்
இது ஒன்றே போதும் வையகத்தில்
பொறுமையின் பூஷணம்
நீ தான் அல்லவோ என்று சொல்ல
சுமந்த பத்து மாதம் முடிவில்
பெற்றுத்தருகின்றாய் சிசுவை
இதை உனக்கு புனர்ஜென்மம்
என்றே கூறுவார் பெரியோர் எல்லாம்
இப்படி பெண்ணே இந்த மண்ணில்
இவ்வுலகு உள்ளவரை நீ மட்டுமே
பிள்ளைகளை சுமந்து ஈன்றெடுக்க முடியும்
நீ தான் பிறப்பில் உயர்ந்தவள்
மானிடரில், பெண்ணே நீ தான்
தாய்,, அன்னை தெய்வமும் நீயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-May-17, 3:21 pm)
பார்வை : 106

மேலே