சிறந்த நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து
மிகு பலருக்கு அறியா முகம்
வெகு சிலருக்கு அறிந்த முகம்
என்னை
அறிந்த முகமாய்
ஆக்கிய மனிதர்.
நல்லவராக நடிக்கவுமில்லை
நல்லவராக நினைக்கவுமில்லை
நல்லவராகவே இருக்கிறார்.
பண்பர் ஒருவர்
நண்பர் ஆனார்.
ஆர்.எம்.எம்.கணேசன்
யார்?
யாராயிருந்தால் என்ன?
மனிதக் கூட்டத்தில்
ஒருவரல்லர்.
மனிதராய் வாழும் மனிதர்.
சிறந்த மனிதனே
பிறந்தநாள் வாழ்த்து.