வெற்றி

வெற்றி,
அனைவரும் தேடி சென்று
அடையும் குறிக்கோள்..

போட்டியாக இருக்க
வேண்டியது
பொறாமையாக
ஒரு வெறியாக இருக்கிறது..

எவன் ஒருவன்
தன் பாசத்தால்
மனைவியின் மனத்திலோ
காதலியின் மனத்திலோ
மற்றவரை மீறி
குடிகொண்டிருப்பது வெற்றியே..

ஒருவர் எப்பொழுதும்
வெற்றி என்ற ஒன்றை
முதல் இடத்தில இருக்க வேண்டும்
என்று நினைத்தால்
அது தவறு..

தங்கையிடம் அண்ணன்
தோழ்வி கொள்வதும்
ஒரு வெற்றியே..

இவ்வுலகில் உள்ள
அனைவரும் ஏதோ ஒரு
விஷயத்தில் ஒருவரை
ஒருவர் வெற்றி கண்டு
கொண்டிருக்கிறோம்

அந்த வெற்றி
பொறுமையாகவும்
தலைக்கனமாக இருந்தால்
அது ஓர் கொடிய நோயாக
கருதப்படுமே ஒழிய
வெற்றியாக ஒருபோதும்
கருதப்படாது...

எழுதியவர் : உமாதேவி.ர (26-May-17, 4:41 pm)
Tanglish : vettri
பார்வை : 185

மேலே