கொடை வள்ளல் என் தந்தை

கடையெழு வள்ளல்களில் ஒருவன் பாரி
தரையில் தவிக்கும் முல்லைக்கொடிக்கு
தான் சென்ற தேரையே விட்டு சென்றான்
தேர்கொடிமேல் பறந்து வளர்வாய் முல்லையே
என்று சொல்லாமல் சொல்லி -இன்றுவரை
கொடைக்கு பாரி என்கின்றோம்

விட்டு விட்டு பெருமழை பெய்துகொண்டிருக்க
தன kodaiyai கையில் ஏந்தி
வீதி வழி சென்றார் என் தந்தை -வீடு திரும்பிய
அவர் கையில் கோடை இல்லை
உச்சி முதல் உள்ளங்கால்வரை
கோடை மலையில் நீராடிவிட்டார் போலும் ?
அப்பா தங்கள் l குடை எங்கே என்று கேட்டேன்
" வீதியில் சிறுமி ஒருத்தி தன தங்கை
என்று சொல்லி ஒரு குழவியை அழ அழ
தோளில் சாத்தி மழையில் நனைந்து சென்றது
என் மனதில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது
என்னால் முடிந்தது அப்போது என் குடையை
அந்த சிறுமிக்கு கொடுத்து மழையின்
தாக்கத்திலிருந்து காப்பது -அதுதான் செய்தேன்
நான் நனைந்தேன் ஆயின் மகிழ்ந்தேன் என்றார் "
இது ஏதோ கதை அல்ல நண்பரே, என் வாழ்வில்
என் தந்தை பல வருடங்களுக்கு முன் செய்த
ஒரு சிறு கொடை- அவரும் 'கொடை வள்ளலே'
என்றுதான் நான் நினைக்கின்றேன் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-May-17, 6:01 pm)
பார்வை : 137

மேலே