சர்க்கரை பொங்கல்

“கதாகாலேட்சபம் செய்யும் கந்தனடிகள்…...தனக்குள் “தான்தான்” உபன்யாசம் செய்வதில் வல்லவர் என்றும், எல்லோரும் ரசித்து தலையாட்டல் தனக்கு கிடைத்த உயர்ந்த அங்கீகாரம்”என புகழ்ந்து கொண்டார்
மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் உபன்யாசம் செய்து ஏகபிசி...ஓய்வே இல்லை.
வல்லவர்தான் அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை கொஞ்சம்...சே...சே.. கொஞ்சமில்லை...ரொம்பவே பந்தா பார்ட்டி…. அவ்வளுவுதான்….
பிறந்தது என்னமோ ...ஒரு குக்கிராமம்… பிழைப்புக்காக நகரம் வந்து ...வளர்ந்து இப்பொழுது “கிராமத்தை மறந்த பிரபல உபன்யாசர்
அந்த குக்கிராம பள்ளி நிர்வாகி பராமானந்தம், தனது பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு “பக்தியை” தம்மூர்க்காரரைக் கொண்டு சொன்னால் பெருமையாக இருக்கும் என வருடக்கணக்கில் “நாள்” கேட்டு….கேட்டு… கிடைக்காமல் வெறுத்தேப் போய் விட்டார்
அல்லிக்கிராமத்தில்...உபன்யாசகரின் பூர்வீக சொத்து தொடர்பாக ஏதோ பிரச்சனை என பங்காளிகள் பேச….யோசித்துப் பார்க்கையில்…...பள்ளி நிர்வாகி பரமானந்தம் வந்துள்ளார் என்ற மேனேஐரின் சேதி கேட்டு மனசுக்குள் “ஒரே கல்லுல இரண்டு மாங்காய்” என கணக்குப் போட்டுக் கொண்டார்
ஐயா, ரொம்ப நாளா...ஒங்ககிட்ட டேட் கேட்டு...கேட்டு….என இழுப்பதற்குள்..நீரே நேர்ல வந்துட்ட...நான் ரொம்ப பிசி….. இருந்தாலும் இரு வரேன் என்று டைரியை எடுத்துப் பார்த்து …..உதட்டைப் பிதுக்கி...பின் இருபதாம் தேதி ஒங்களுக்கு சந்தோசமா என்றார்

டேட் கிடைச்சதிலே…….பள்ளி நிர்வாகிக்கு மகிழ்ச்சி தான்.. உபன்யாசகரின் உள்நோக்கத்தை அறியாமலே..
வகுப்பு ஆசிரியர்கள், ஆசிரியைகள் அனைவரையும் அழைத்து மீட்டீங் போட்டு, நிகழச்சி ஏற்பாடுகள் கவனிக்க சொன்னார். இருபதாம் தேதி மதியம் பள்ளியிலேயே அறுசுவை விருந்து அளிக்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பச் சொன்னார்
வந்தது இருபதாம் தேதி…. கந்தனடிகள்” பந்தாவாக காரில் இருந்து இறங்கி மேளதாளத்துடன் உரிய மரியாதையுடன் மேடை ஏறினார்
ஆரம்பித்தார் ;…...மாணவ மாணவியரே… பக்தின்னா இன்னான்னு சொல்லி தரப்போறேன்.
மனசுக்குள்ளாற… ஒங்களுக்கு பிடிச்ச கண்ணன், இராமன், முருகன் ,அம்பாள் “இப்படி ஏதாவது ஒரு கடவுள்” உருவத்தை மனமுருக நினைச்சு..நினைச்சு அதை குழந்தையா….தாயா..இப்படி உருவகம் பண்ணி….அது கூட பேசி...பேசி பழக்கப்பட்டு வந்தா” என நீட்டி முழக்கும்போது” “சாமி” “சக்கரைப் பொங்கலா கூட” நெனைக்காலாமா” சாமி” என்ற சிறு மாணவனின் குரல்….கேட்டு...திகைத்து வழக்கமா…. வசதியானவர்கள் வரும் கதாகாலேட்சப மாதிரியே இங்கேயும் இழுத்ததில்...மணியைப் பார்த்தார் மணி ரெண்டு.

ஏழைகளின் வயிறு ஈரமாய்…இருந்தால்தான “பக்தி” பிரசங்கம் எடுபடும் என்று புரிந்ததில் …..மாணவ...மாணவியரின் வயிற்றில் கரைந்தது சக்கரைப் பொங்கல் மட்டுமல்ல….அவரின் கர்வமும்தான்.
கவிஞர் கே. அசோகன்

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (27-May-17, 10:04 pm)
சேர்த்தது : கேஅசோகன்
Tanglish : sarkkarai pongal
பார்வை : 266

மேலே