துடிக்கும் இதயம் வெடிக்கும் முன் வா
என்ன நான் செஞ்சேன் புள்ள...
நெஞ்சுக்குள்ள வச்ச முள்ள...
கரைமீனா நானும் துள்ள...
வலிசொல்ல வார்த்தை இல்ல..
அடங்காத ஆசைஉன்மேல்
அடிநெஞ்சில் கூடுதடி..
விளங்காத ஏதோஒன்று
விளங்காகி போனதடி..
தொட்டுவிட்ட இடங்கள் எல்லாம்
மொட்டுவிட்டு பூக்குதடி..
விட்டு விட்டு நீயும் போனா
உன் நினைவுபுயல் தாக்குதடி..
சருகா பறக்குறேன்..
எனை நான் மறக்குறேன்.
உயிரே உனக்காக
உயிரை வளர்க்கிறேன்..
நீ மட்டும் தான் எனக்கு வேனும்..அடி
உன்கூட கூடத்தான் தோனும்.
தள்ளி நீ போகாதே என் மூச்சி காத்தே..
அள்ளி என்னை அணைச்சிக்கோ உன் உயிரில் சேர்த்தே....