கல்வீச்சு
கடமை என்ன வென்பதை அறியா -
காசுக்காக மாரடிக்கும் ஒரு கூட்டம் !
கயவர்களின் கண்களில் பட்டால் போதும் ;
காரியம் எல்லாம் கண கட்சிதமே !
ஆசை வார்த்தையை அள்ளி இறைக்கும் !
அகிம்சை வழியில் அறப்போர் என்று சொல்லி ;
கபட நாடகத்தை அரங்கேற்ற -
கல்வீச்சை கையில் எடுக்கும் !
உழைத்து உயர நேரமில்லை !
உண்மை பேசவும் உறவும் இல்லை !
குறுக்கு வழியில் குபேரனாக ;
குற்றம் என்பதும் இவர்களுக்கு -
குற்றமாய் தெரிவதுமில்லை !
கல்வீச்சில் காரியம் நடக்குது !
கலவரமும் கனகச்சிதமாய் நடக்குது !
பிணம் தின்னும் கழுகுகளோ !
பின்னாலேயே காத்துக்கிடக்குது !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
