அன்பே சிவம்

தேடலறியா மாந்தரினுள் தேடலானாயே சிவமே...
இசையறியா உலகில் இயற்கையியல் இசையானாயே சிவமே...
ஆக்குதல், காத்தல், அழித்தல் என்றே முத்தொழில்களையும் உன்னோடு கொண்டு,
எதை நீ ஆற்ற வேண்டுமென்று மனம், செயல் சுதந்திரத்தை மாந்தரிடம் தந்தாயே சிவமே...
ஆன்மாவானாயே சிவமே...
அற்புதமானாயே சிவமே...

சிவமே சிவமே என்றிட நாளும் சிந்தனை தெளிகிறது மனமே...
தவமே தவமே ஆற்றிட ஞானமும் பிறக்கிறது சிவமே...
அறம் படைத்து அரணானாயே சிவமே...
அழியாத காவியமானாயே சிவமே,
நித்தம் உனை நான் படிக்கிறேன் வாழ்வின் நல்லறமே...
காவி அணிகிறேன் சிவமே...
ஞானிலரை ஏமாற்றேன் சிவமே...
சைவமும், வைணவமும் ஒன்றே என்று உணர்த்தினாயே சிவமே...

சிவமே நானுனை என்றும் மறவேன்...
மறந்தாலே கொடிய அரக்கராய் ஞானிலத்தின் பேராபத்தாய் திகழ்வேன் சிவமே...
எனைக் கட்டி வைக்கும் சக்தியானாயே சிவமே...
என்னில் நன்னிலை உணர சமநிலை தருகிறாயே சிவமே...
ஒளியுனுள் நீயிருந்து புறத்தை புலப்படச் செய்யும் சிவமே...
உள்ளத்தை உன்னிடமே சமர்பித்துவிட்டேன் சிவமே...
இவ்வுலகால் நன்மை வரினும், தீமை வரினும்
என்னை கரையேறி இனியொரு பிறவி எடாமல் உன்னுள் என்னை கரைத்து கலந்துவிடு சிவமே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (31-May-17, 10:19 am)
பார்வை : 956

மேலே