அலைகள் ஓய்ந்ததில்லை
அலைகள் ஓய்ந்ததில்லை!
====================================ருத்ரா
காதல் சின்னம் தான்
இருப்பினும் தாஜ்மகால்
பளிங்கில் ஒரு எலும்புக்கூடு!
ரோமியோ ஜூலியட்டுகள்
ஷேக்ஸ்பியரின்
ஆங்கிலச்சொல் விளையாட்டுகள்.
லைலா மஜ்னு
நெருப்பில் எரியும்
பாலைவனத்து தாமரைகள்!
சலீம் அனார்கலி முத்தங்கள்
அரசாங்கத்திமிர் வாதத்தில்
கல்லறையில் முடிந்து போயின.
அம்பிகாபதி அமராவதி
அவசரக்காதலில்
கொலைக்களம் சென்றார்கள்.
ஆசிட் வீசுகிற கொடூரன்கள்!
கண்ட துண்டமாய் வெட்டுகின்ற
சாதிவெறி அரக்கன்கள் !
சே ச்சே!
போதுமடா காதல்! என்று
காதல் அலைகள் ஓய்ந்ததில்லை.
=========================================