விவசாயி

வித்து ஒன்னு முளைக்கத்தான்
விழுந்துவிட்டான் விவசாயி
ஊருக்கே உணவூட்டி
உரமாக உறங்கினானே
மண்ணோடு உறவாடி
மண்மீது கண்மூடி
கண்ணாமூச்சி காட்டிவிட்டான்
கண்கட்டிய கலியுக
மாந்தர்கள் விழித்துக்கொண்டே
தொலைந்து போக
குருதியின் இறுதி ஈரம்
காயும் வரை இறுக்கிகொள்வோம்
கொள்ளைப் பணத்தை ...
கொடுத்து விட்டால்
கோடி புண்ணியமே...
கெடுப்பதன்றி ஏதும் அறியோமே...
கேடுகட்ட கொள்கையால்
நாடு நாலாய் போனதே!
ஆத்து மணலள்ளி
அடுத்த தலைமுறைக்கி
சமாதி கட்டி
சம்பாதிக்கும் பொருளெல்லாம்
புதையுமே மம்மி போல...
வளமான நாட்டத்தா
வாழவச்ச விவசாயி
வழி மூடி போறானே
வாழும் வழி சாத்திப்போறானே ...

எழுதியவர் : கணேசன் (1-Jun-17, 10:41 am)
சேர்த்தது : கணேசன் நா
Tanglish : vivasaayi
பார்வை : 1751

மேலே