காதலுக்கு புதியவன்
நீ யார் என கேட்டாய்?
உன் படிப்புக்கு நிகரானவன் அல்ல!
உன் அழகுக்கு ஈடானவன் அல்ல!
உன்னை விரும்ப கூடியவர்களின் வரிசையில் கடைசியில் நான்!
நீ என்னை பார்த்ததும் இல்லை!
பார்த்தால் பிடிக்க போவதும் இல்லை!
நீ என்னிடம் பழக போவதும் இல்லை!
ஆனால்
பழகிய பின் நீ என்னை விட்டு பிரிய போவதும் இல்லை!
நான்தான் உனக்கு புதியவன்!
இந்த காதலுக்கும் புதியவன்!
ஏற்றுக்கொள்வாயா என் காதலை?