தமிழ்

குறள்வெண் செந்துறை :
அன்னைத் தமிழே அமுதின் சுவையே
நின்னைப் பருகி நிறைந்திட வந்தேன்...
கொஞ்சும் கவியிலென் கூட்டில் நுழைந்து
நெஞ்சம் குளிர நீயருள் பொழிந்தாய்...
அம்புலி மென்குளிர் அவனியில் வீழ்வதாய்க்
கம்பன் சிந்தையில் கனிந்தே உதிர்ந்தாய்...
விண்தரும் மழையாய் வியப்பில் ஆழ்த்திப்
பண்தரும் இனிமையாய்ப் பாரமும் குறைத்தாய்...
நற்றமிழ் மொழியுனை நாளும் பயின்று
வெற்றி வாகையும் விரைவில் சூடுவேன்...
கற்றுணர் அறிவில் கவிஞனாய் வளர்ந்து
பற்றுக் கொள்ள பக்தியும் பெருகுதே...