எங்கள் வீட்டு பசு எங்கள் இல்லத்து இலக்குமி
அதோ அந்த அழகிய
வெள்ளைப் பசுவைக் கண்டேன்
அதை சுற்றி சுற்றி அதன்
அழகிய பழுப்பு நிற
இளங் கன்று
குதித்து குதித்து ஓடுது
தாயின் மடியை முட்டி முட்டி
பால் குடிக்குது பின்பு
தாய்ப் பசுவின் முன்னே
வந்து நிக்க தாய் அவள்
அன்போடு ஆதரவோடு
தன நாக்கால் கன்றை தழுவது
இதோ பால் காரன்
வந்துவிட்டான்
ஏனத்தில் மிகுதி பாலை
கறந்தெடுக்கிறான் பிறகு
அதை விற்று நாங்கள் பணம் ஆக்குகிறோம்
இன்று அரிய பசும் பாலுக்கு
அலைந்திடும் மாடி வீட்டாருக்கு !
என் இல்லாதால் அந்த பசுவின்
சாணத்தால் வீட்டை மெழுகி
சுத்தமாய் வைக்கிறாள்
தினம் தினம் அதி காலையில்
வீடு முன்னே சாண நீரால் தெளித்து
வண்ண வண்ண கோலமிட்டு
வீட்டிற்கு மங்களம் கூட்டுகிறாள்
மிகுதி சாணத்தை விரட்டி ஆக்கிறாள்
அடுப்பு எரிக்க சமையலுக்கு
கொஞ்சம் சாணி வீட்டு பள்ளத்தில் ;
சில நாட்களில் எருவாகி
மண்ணோடு சேர்ந்து
மண்ணிற்கு உரம் தந்து
காய்கறிகள் விளைவிக்க
தயார் ஆகிறது
அதோ கிராமத்து வைத்தியர்
வருகிறார் பசுவின் சாணம்,
கோமியம் தேடி அரிய
நாட்டு மருந்து ஒன்று செய்திட
புற்று நோய்க்கு தமிழ் மருந்தாய்
இப்படி பசுவே நீ
எங்கள் இல்லத்தில்
செல்வம் நல்கும்
லக்குமியாய் இருக்கின்றாய்
எங்கள் குடும்பத்து
லக்குமியாய் தாயாய்
உன்னை தொழுதலில்
பெருமை அடைகின்றோம்