குழந்தைகளும், பறவைகளும் - சிறு உரையாடல் வடிவிலான பாடல்

குழந்தைகள்:-
" பறவைகளே! பறவைகளே!
கொஞ்சம் வாருங்க...
நீங்க பறந்து செல்லும் இரகசியமென்ன கொஞ்சம் சொல்லுங்க...
சிறகிருக்கும் பறவைகளெல்லாம் பறப்பதில்லைங்க...
நீங்க பறந்து செல்லும் தனித்துவத்தை கொஞ்சம் சொல்லுங்க..."

பறவைகள்:-
" குழந்தைகளே! குழந்தைகளே! கொஞ்சம் நில்லுங்க..
நாங்கள் சொல்லப் போகும் இரகசியத்தை உங்க மனதில் நிறுத்துங்க...
பயத்தைத் துறந்தால் உயர பறப்பது ரொம்ப சுலபமுங்க...
துணிச்சலை உங்க மனதிலே மரமாய் வளருங்க...

குழந்தைகள்:-
" பறவைகளே! பறவைகளே! என்ன சொல்லுறீங்க?.
பயத்தைத் துறந்தால் எங்களால் எப்படி பறக்க முடியும்ங்க??.
அதற்கு உடலமைப்பு, சிறகு என்று எதுவும் வேண்டாமாங்க??
கொஞ்சம் விளங்குறமாதிரி விளக்கமா சொல்லுங்க... "

பறவைகள்:-
" குழந்தைகளே! குழந்தைகளே! சொல்லுவதைக் கவனமாகக் கேளுங்க..
பறவைகாளாகிய எங்களைக் கண்டே அந்த ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்கினாங்க...
அதில் பறந்து அதை சோதித்துப் பார்க்க அவர்கள் பயந்திருந்தால் இன்று விமானப் பயணமேதுங்க??.
பயத்தை கைவிடுங்க..
துணிச்சலோடு பகுத்தறிவின் வழியில் பறந்து செல்லுங்க...

குழந்தைகள்:-
" பறவைகளே! பறவைகளே!
உங்களுங்கு நன்றி சொல்றோம்ங்க.
அறியாமை போக்கி அறிவைத் தந்ததற்கு மிக்க நன்றிங்க...

குழந்தைகளின் நன்றியை ஏற்றுக் கொண்ட பறவைகளும் பறந்து செல்ல, குழந்தைகள் தங்களுடைய பயம் கொன்று பகுத்தறிவுச் சிறகை விரித்தே பறக்கிறாங்க...

நன்றிங்க...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Jun-17, 2:15 pm)
பார்வை : 170

மேலே