நிரந்தரமானதைத் தேடுங்கள்

இவ்வுடலின் மீதே உரிமையில்லாத நான்,
இவ்வுலகிலுள்ள மற்ற மனிதர்கள் மீது எவ்வாறு உரிமை கொள்வேன்?...

இவ்வுலகில் வாழும் நாட்களெல்லாம் சொற்பமே...
முதல் நாள் பிறந்தார்...
இரண்டாம் நாள் கல்விச்சாலை சேர்ந்தார்...
மூன்றாம் நாள் வேலை தேடி அலைந்தார்...
நான்காம் நாள் வேலையில் சேர்ந்தார்...
ஐந்தாம் நாள் திருமணம் செய்து கொண்டார்...
ஆறாம் நாள் தேனீக்கள் தேனைச் சேகரிப்பதைப் போல தன் சந்ததிக்காக பொன், பொருளென சேர்த்தார்...
ஏழாம் நாள் தன் சந்ததியாக ஒரு குழவியை ஈன்றெடுத்தார்...
எட்டாம் நாள் கானல்நீர் மறைதலே போலே யாவும் மறந்து துறந்து இயற்கை எய்தினார்...
இப்படித்தான் போகிறது இன்றைய மனித வாழ்க்கை...
இதில் சிலர் சீக்கிரமே மரணம் வேண்டுமென ஏற்படுத்திக் கொள்கின்றன நிலையாமையை ஏற்காது...
இது கிட்டத்தட்ட எறும்பு முதல் எறும்பி வரை ஐந்தரைகளிடம் காணப்படும் அதே வாழ்க்கை முறையே...

தேடும் செல்வமும் நிலையாது...
எழில் கொஞ்சம் இளமையும் நிலையாது...
இந்த ஊனுடலும் உன்னோடு நிலையாது...
எல்லாம் கொஞ்சக் காலம் தான்...
நீர்குமிழி வாழ்க்கை தான்...

நிலையாமையில் சிக்கிய நாம் அதிலிருந்து மீள வேண்டுமெனில் நிரந்தரமான ஒன்றே நம் தேடலாக அமைதல் வேண்டுமே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Jun-17, 8:04 am)
பார்வை : 479

மேலே