கிராமத்து உணவுண்டு கிராமிய பாடல்கள் கேட்க ஆசை வந்தது

பட்டணத்து உணவருந்தி உணவருந்தி
நாக்கு செத்து போச்சு - என் சொந்த
கிராமம் நோக்கி சென்றேன்
பாட்டி கையால் சுவையான
நாட்டு சமையல் சாதம் உண்டு
நாட்டு பாடல்கள் இன்னிசையில்
அகம் மகிழ்ந்து இளைப்பாற

நல்ல மண் பாண்டத்தில்
பச்சை சுண்டைக்காய்
வெத்தல குழம்பு பாட்டி
கை வசத்தில் நறு மணம் பரப்ப
தோட்டத்து முளைக்கீரை
பொரியலும் பக்கத்தில்
தயாரானது ; சிறுது நேரத்தில்
தலை வாழை இலையில்
பாட்டி சுவையான கிராம
உணவு பரிமாறினாள்
செம்பா அரிசி சோற்றில்
சுண்டைக்காய் வற்றல் குழம்பு
காரத்தைப் போக்க பசும் நெய் கலந்து
கீரை பொரியல் கொண்டு
சுட்ட அப்பளம் தொட்டு கொண்டு
பெரும் பசியில் அள்ளி அள்ளி
சோறு உண்டேன் பசி தீர
நாக்கில் புது ருசி சுரக்க
முடிவில் பானையில் தோய்த்த
கற்கண்டு சுவைத்தந்த
பசும் தயிரில் பாட்டி கலந்த
தயிர் சாதம் பரிமாற என் அம்மா
வடு மாங்காய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள
போட்டாள் ; அத்தனையும் உண்டு மகிழ்ந்திட
பாட்டி நாட்டுப்புற பாடல்கள் சில
பாடி அசத்திவிட்டார்
மிக்க மகிழ்ந்தேன் இந்த சுவையான
உணவுண்டு செவிக்கு நல்லிசையும் சேர்ந்து
இதற்கு இணை எந்த " ஐந்து நட்சத்திர
ஓட்டல் உணவிலும் " காண முடியாது

மனமில்லாமல் பட்டணம் திரும்பினேன்
சனி ஞாயிறு முடிந்த பின்னே -திங்கள்
மீண்டும் வேலைக்கு திரும்ப !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Jun-17, 3:20 pm)
பார்வை : 93

மேலே