கலிகாலம்

கவலை கடலை தந்தது கலிகாலம்

மனிதனுக்கு மிருகத்தனம்

பிறந்த இலையுதிர்காலம் இந்தகாலத்தில்

நிம்மதியை தினம் தேடும் நெஞ்சங்களாய் மனித வாழ்வு..


நீதிமான்கள் சிறைசெல்வதும்

நயவஞ்சகன் ஆட்சிபிடத்தில்

மக்களை ஆட்டிபடைக்க பஞ்சம் தலைதூக்கின உரிமைக்கான

போராட்டம் சில இடங்களில்..


தண்ணீர் விலைக்கு வந்த நிலைபோல்

காற்றும் என்ன விலை எனும்

நேரம் விரைவில் சுமந்து வரும்

கலிகாலம்..


உறவில் உண்மையும் உலகத்தில்அமைதியும்

உள்ளத்தில் அன்பையும்

சிதைத்த காலமாய் காட்சி தர

இனி எந்த காலம் மனிதனை இணைக்கும்

கனிவான காலம் என ஏங்கி தவிக்கும் கண்கள் ஏராளம்..


பலயுகம் தாண்ட வேண்டும் என வேதம் சொல்ல

சில கணம் போதும் என சன்றோர்கள் சொல்ல

கலிகாலத்தை கட்டுக்குள் கொண்டுவர

அன்பின் விதை அடிமனதில் விதைத்து விட்டால் ..

எழுதியவர் : shivasakthi (3-Jun-17, 12:15 am)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 265

மேலே