கன்னக்குழியழகி

கன்னிச் சிரிப்பழகி
கன்னக் குழியழகி
கனவுகள் கோடி தரும்
கூர்விழி பெண் அழகு

கொஞ்சும் தமிழ் அழகு
கெஞ்சும் பேச்சழகி
நீ தரும் கவிதைகள்
கம்பனை மிஞ்சுதே...
உன்னைக் கண்டால் ஏனோ
என் ஆண்மையும் அஞ்சுதே...

இருபிறை நிலா புருவத்தின்
இடையில் நிறைந்திருக்கும்
நெற்றிப் பொட்டழகு
சிவந்து பழுத்திருக்கும்
செவ்விதழ் பூவழகி

என்னைக் கண்டால் வெட்கம் கொள்ளும்
உன் பெண்மை பேரழகு
இத்தனை அழகு கொண்டு
என் கண்முன்னே வலம் நிலவே
கொஞ்சமெனும் திமிர்
உனக்கு இருக்கத்தானே செய்யும்?

ஆழிப்பேரலையாய்
அசைந்து நீ வருகையிலே
முத்தமிட முயன்றிடுவான்
முடவனாய் இருந்தாலும்...
ஆதலால் அழகே...
தனியே செல்லாதே....
பாதிக்கதவில் மறைந்து நில்லாதே...
உன் துணையாய் நான் வாறேன்...
செயற்கை அழகு எதற்கடீ கண்ணே.?
பூஞ்சோலையை விட்டுபுட்டு...
தேனீக்கள் எல்லாம்
உன்னிதழைத்தேடி வரும்
மர்மம்தான் என்ன?

தீண்டத்தான் தூண்டுறீயே...
உன் எண்ணம்தான் என்ன?
என்னைக் கொல்லத்தான் நிற்கிறீயோ
பாதி கதவுக்கு பின்னே....

முழுமுகம் பார்த்தால்
கொஞ்சத்தான் தோனும்...
பழுத்த செவ்விதழைக் கண்டால்
என் வாயில் எச்சில் ஊறும்...
கடித்து ருசித்து உண்ணும்வரை...
வேறு என்ன வேணும்?

கண் இமைக்கும் நேரத்திலே
கவர்ந்திழுக்கும் பெண்ணே
பேசத்தான் முடியலையே...
உன்னைக் கண்ட பின்னே...
என்னை இழுத்து போட்டு...
கதவை சாத்துவதேன் கண்ணே...
விடியும்வரை பிரியாதிருக்கத்தானே....
போதுமடீ அழகே...
நீ நின்று வெட்கம் கொண்டது

எழுதியவர் : கிச்சாபாரதி (3-Jun-17, 10:18 pm)
பார்வை : 625

மேலே