ஆண் பெண் நட்பு
அன்பாக ஹாய் சொல்லி
சினேகத்தால் சொந்தமாகி
சந்திரனை துரத்தி சூரியன்
உதிர்த்த வேளையில்
கண் திறந்தும் திறக்காமலும்
கை செல்போனை தேடுகிறது
உன்னிடமிருந்து வந்த செய்தி
என்னவென்ற ஆவல் மேலோங்க
உன்னையன்றி பிறர் செய்தி மட்டுமே
அதிலிருக்க.....
என்னவாயிற்று
என்ற சிந்தனை கரைபுரண்டோட
காத்துக்கிடக்க வைக்கும் அளவுக்கு
ஆழப்பதிந்த தோழியாகி விட்டாய்......
****"""""**** Samsu ****"""""****