கட்டிலில் ஓர் காமம்

##கவிதை நயத்தோடு கவிஞனாய் பாருங்கள்##

எல்லை நெருங்க கூடும் வேகம்
ஓட்டமதில் மட்டுமல்ல-கட்டில்
ஆட்டமதிலும்
போகப்போக இன்னும் வேகம்
பேதையவள் எல்லை தொட்டாள்,
போட்டியில் நான் வென்றுவிட்டேன்!

மூச்சிறைக்க முன்முகட்டால் வானம் தொட்டு வந்தாள்...
முடிவில் அதை என் உணவாய் நாணம் விட்டுத் தந்தாள்!

இப்போது...

என் வீரியத்தி்ன் சாட்சியாக வீழ்ந்து அவள் கிடக்கிறாள்;
வீழ்த்திவிட்ட எனக்கு அதில் வாழ்த்துமடல் கொடுக்கிறாள்;
முடிந்தவரை என்னைத்தின்று மூர்ச்சையுற்று இருக்கிறாள்;
முதன்முதலாய் உச்சம் தொட்ட முழுமையிலே கிடக்கிறாள்!

செருகிய கண்கள்,
முனகிய இதழ்கள்,
தழுவிய கைகள்,
விலகிய கால்கள்,
சீறிய நெஞ்சு,
கீறிய நகங்களெல்லாம்
ஓய்வில் இருக்கிறது!
மேலெங்கும்
வியர்வைத்துளி
மினுமினுப்பை சேர்க்கிறது;
மெலிந்த அவள் இடை அழகு
மேலும் என்னை ஈர்க்கிறது;
இடிபொறுத்த இடமதுவும்
எனை சீண்டிப் பார்க்கிறது;
இயலாமை மறந்து மனம்
இன்னொரு வலம் கேட்கிறது!

எழுதியவர் : சக்திவேல் (5-Jun-17, 8:08 am)
பார்வை : 122

மேலே