நான் வாழ நீ வேண்டும்

என்னவெனச் சொல்வேன் உன்னை
மல்லிகை மணம் கொண்டவள் என்பதா
காற்று வந்தால் கலைந்து விடுவாயே
நீ கலைவதா? நான் உயிரின்றி அலைவதா ?
ரோஜா மலர் அழகி என்பதா
வெப்பம் பட்டுக் கருகி விடுவாயே
நீ கருகுவதா ? அதனால் நான் உருகுவதா ?

நீ என் ஜீவ நதி
என் இதயத்தில் ஊற்றெடுத்துப் பாய்கிறாய்
என் உடல் என்பு முழுதும் செழிப்பைப் பொழிகிறாய்
நீ நிரந்தரமானவள் எனக்கு எல்லாமும் ஆனவள்
பயிர் வாழ நீர் வேண்டும் நான் உயிர் வாழ நீ வேண்டும்
நீ என் பாசனம் நகராமல் அமர்ந்துவிடு என் இதய ஆசனம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (6-Jun-17, 2:56 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 798

மேலே