தோழமையில் பேதைமை
காலங்கள் கடந்த நட்பு
கல்லூரி வாசலில் கைகோர்த்தன
கபடம் சிறிதும் கலக்காமல் !
மனதோடு உறவாடிய நட்பு
மனை வந்ததும் வாடியபயிர்களாய்
மலர்ந்தது மற்றோர் ஏச்சுக்களோடு !
அர்த்தநாரியாம் இறைவன்அருள் கிட்டவேண்டும்
ஆடவர் நட்புமட்டும் ஆகாசதூரமாம்
அகிலம்உள்ள மட்டும்பேதைமைக்கு பஞ்சமில்லை!
நரைகூடியும் கற்பில் எங்கள்நட்பு
நாசுழலும் ஏச்சுக்கள் பலனில்லை
நட்புக்கு எல்லை என்றுமில்லை !