தள்ளிப்போகாதே

மை தீட்டிய ஏவுகணை ஒன்று
மெய் தீண்ட மிதக்கிறேனின்று..!
இருவிழி மொழியாலே
இதயத்தை கொய்தவளே..!
தேன்தமிழ் மொழியாலே
ஓர்மொழி சொன்னாலென்ன..!
வாய்மொழி வந்தமர
வாய்ப்பொன்று தந்தாலென்ன..!
போர்வாள் விழிகளில்
குத்திக்கிழிக்கும் கத்திமுனையில்
என் புத்தியை மழுங்கச்செய்கிறாய்..!
கூர் தீட்டிய உன் விழிகளின் வழியேதான்
அகமதை படித்திட நுழைகிறேன்..!
திகட்டா தேன் சுரக்கும் உன் கனியிதழில்
யுகமதை கடந்திட விழைகிறேன்..!
தேவதை நீ தேராய் நடக்கையிலே
நேராய் நிமிர்ந்து நடப்பவன் நானும்
வேரோடு சாய்கிறேனே ..!
வீதியிலே வீழ்கிறேனே..!
கார் கூந்தல் அசைந்தாட
மெல்லிடையும் ஒளிந்தாட
கள்ளியே உன்னை
அள்ளி அணைத்திட ஏங்குகிறேன்..!
மௌன மொழி கலைத்து
முத்த கலை வடித்து
மொத்த கலை கற்றிட வேண்டாமா?
தள்ளிபோகாதே என்னை கிள்ளி எறியாதே..!