குருவாகிய இயற்கையின் தாள் பணிகிறேன்

கற்றறிந்த வித்தையின் மகத்துவம் உணராதவரிடம் அவ்வித்தை நிலைப்பதில்லையே...
அன்புமிகு தாயாய்,
அறிவுமிகு தந்தையாய்,
தட்சனை கேட்காத குருவாய், வாரி வழங்கும் இயற்கையின் வித்தைகளைக் கற்றறிந்தீரோ ஞானிலத்தாரே?..

கல்வியென்றாலே கணக்கில்லா கட்டணம் கேட்கும் கல்வியாளர்களே,
இந்த ஞானிலம் கெட்டு போக நீங்களே காரணமென்று அறிவீரோ??

நித்தமும் காணுகிறேன் மனித சமுதாயத்தின் கணக்கிலடங்கா அவலங்களையே...
கற்றுக் கொடுக்கும் போதனையாளரின் கண்கள் போதையோடு தன்னை நோக்குகிறதென்று அறிந்த எந்த சீடரின் மனம் தான் தன் ஆசிரியரிடம் சமர்ப்பணம் கொள்ளும்???

இயற்கையே ஒப்பற்ற குரு...
அதற்கே குரு என்ற இடத்திற்கு தகுதி உள்ளது...
மற்றதெல்லாம் போலி வேடங்கள்...

ஐந்து வயது சிறுவனுக்கு கல்வி போதிக்க பத்தாயிரம் ரூபாயில் தொடங்கி,
லட்சமெனக் கல்வியின் தரம் பிரித்து பணமே லட்சியமாய் கொண்டு வாழும் ஞானிலத்தாரே,
உங்கள் மனமே ஊனமாகி விட்டதறியாமல் வளரும் எதிர்கால சந்ததிகளின் மனதிலும் ஊனத்தை உண்டாக்கி, வளர்க்கிறீர்களே...

பகுத்தறிவிருந்தால் புரிந்து கொள்ளுங்களே...
இல்லையென்று அதையும் பணத்தால் விலைக்கு வாங்க முயற்சிக்காதீர்களே...

குருவாகிய இயற்கையின் தாள் பணிகிறேன்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-Jun-17, 6:29 pm)
பார்வை : 3090

மேலே