வைகாசி விசாகம்-

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தனிச் சிறப்புடையதுதான். இவற்றுள் வைகாசி மாதத்தினை மாதவ மாதம் என்பர். இம்மாதத்தில் புனித நீராடி மகா விஷ்ணுவை துளசியால் பூஜை செய்தால் பேறு கள் பல பெறலாம். பிரகலாதனுக்காக விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்த தினம் வைகாசி சுக்ல சதுர்த்தி. புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றது வைகாசி விசாக பௌர்ணமி யில். திருவேட்களத்தில் அர்ச்சுனனுக்கு பரமன் பாசுபதாஸ்திரம் வழங் கியதும் வைகாசி விசாகத்தில்தான்.சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகளை உமையவள் ஒரே குழந்தையாக சேர்த்த நாள் வைகாசி விசாகம். விசாகத்தன்று முருகனின் அனைத்து திருத்தலங் களும் விழாக்கோலம் பூணும். இந்நாளில் விரதம் மேற்கொண்டு முருகன் ஆலயம் சென்று வழிபட் டால் புத்திர பாக்கியம்
விசாகம் ஞானச் சிறப்புக்குரிய சிறந்த நட்சத்திரம். தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகப் பெருமான் அவதரித்தது விசாக நட்சத்திரத்தில்தான். சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகளை உமையவள் ஒரே குழந்தையாக சேர்த்த நாள் வைகாசி விசாகம். விசாகத்தன்று முருகனின் அனைத்து திருத்தலங் களும் விழாக்கோலம் பூணும். இந்நாளில் விரதம் மேற்கொண்டு முருகன் ஆலயம் சென்று வழிபட் டால் புத்திர பாக்கியம் உள்ளிட்ட பல பேறுகள் கிட்டும். வைகாசி விசாகத்தன்று பிறக்கும் குழந்தை கள் அறிவில் சிறந்து விளங்குவர் .

வைகாசி விசாகம் முருகனுக்கு மட்டுமின்றி சிவனுக்கும் உகந்த நாள்தான். சிவனை நினைத்து கலச ஸ்தாபனம் செய்து யாககுண் டம் அமைத்து வழிபட வேண்டும். சிவனுக்கு நடைபெறும் பல்வேறு அபிஷேகங்களில் சந்தனாபிஷேகம் செய்வதைத் தரிசித்தால் மகாலட்சுமி யின் அருள் கிட்டும். பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர் மாலை கள் அணிவித்து அர்ச்சனை செய் தால் பாவங்கள் அகலும், புண்ணி யங்கள் பெருகும்.

அம்மன் கோவில்களிலும் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும். மாரியம்மன், திரௌபதி அம்மன், காளியம் மன் கோவில்களில் அன்றைய தினம் தீமிதி விழா சிறப்புடன் நடைபெறும்.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' எனப் பாடிய வள்ளலார் வடலூரில் சத்ய ஞான சபையை நிறுவியதும் வைகாசி விசாக தினத்தில்தான். அதுமட்டுமின்றி கும்பகோணத்தில் கருட சேவை, காஞ்சி வரதர் ஆலய பிரம்மோற்சவம், குடந்தை ஆதிகும்பேஸ்வரர் தீர்த்தவாரி என எல்லா விழாக்களும் இந்த வைகாசி விசாகத்தன்றுதான் நடைபெறும். திருவானைக் கோவில் ஜம்புகேஸ் வரர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தன்று ஏக வசந்தம் நடைபெறும். அன்று அன்னாபிஷேக மும் பால் மாங்காய் நிவேதனமும் செய்வார்கள்.





பழனி

வைகாசி விசாகம் மட்டுமல்லாமல், சித்திரை மாதப் பிற்பகுதியும் வைகாசி மாத முற்பகுதியும் இணைந்த அக்னி நட்சத்திர காலமாகிய 15 நாட்களுக்கு பழனி மலையை பக்தர்கள் இரவு பகலாக கிரிவலம் செய்வர். கடைசி நாளன்று முத்துக்குமார சுவாமி மலையடிவாரம் வந்து பவனி வருவார். பூக்கட்டி மண்டபம் அருகே தீர்த்தம் வழங்கி இரவு கிரிப்பிரகார திருவுலா சென்று வருவார். இது ஆண்டுதோறும் நடக்கும் சிறப்பு விழாவாகும்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா பதினான்கு நாட்கள் நடைபெறும். முதல் மூன்று நாட்களுக்கு மலைமீது விழா நடக்கும். நான்காம் நாள் முதல் அர்த்த நாரீஸ்வரர் நகருக்கு இறங்கிவர, மலை யடிவாரத்தில் விழா நடைபெறும். 9-ஆம் நாள் திருவிழா வைகாசி விசாகத்தன்று நடைபெறும். அன்று இறைவன் தேரில் எழுந்தருளி நகர்வலம் வருவார். பதினான்காம் நாள் திருவிழா வின்போது இறைவன் மலைக் கோவிலுக்குத் திரும்பிச் செல்வார்.

உறையூர்

உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில் வைகாசிப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாளன்று கட்டுத்தேர் அமைத்து இறைவனை எழுந்தருளச் செய்து திருவீதி வலம்வரச் செய்வார்கள். இவ்விழாவை ஏற்படுத்திய பெருமை சூரவாதித்த சோழனையே சேரும்.

குடந்தை

குடந்தை சாரங்கபாணி ஆலயத்தில் பத்து நாட்களுக்கு வைகாசி வசந்த உற்சவம் நடைபெறும். உற்சவத்தின் முதல் ஏழு நாட்களின்போது பெருமாளும், அடுத்த இரண்டு நாட்களுக்கு தாயாரும், கடைசி நாளன்று பெருமாளும் தாயாரும் சேர்ந்தும் காட்சி தருவார்கள்.

விசாக தர்மம்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய, வைகாசி மாத ஏகாதசி தினத்தில்தான் பாற்கடலில் இருந்து அமுதம் வெளிப்பட்டது. இறைவன் அதைக் காவல் செய்தது துவாதசி தினம். தேவர்கள் அமுதம் உண்டது திரயோதசி தினம். அன்று பௌர்ணமியும்கூட. இதனால் வைகாசி மாத ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பௌர்ணமி தினங்களில் செய்யப்படும் தான- தர்மம் பன்மடங்கு பலனைத் தரும்.

சிம்மாசலம்

ஆந்திர மாநிலம், சிம்மாசலத்தில் நரசிம்ம மூர்த்திக்கு வருடம் முழுவதும் சந்தனக்காப்பு சாற்றப்பட்டிருக்கும். வைகாசி விசாகத்தன்று சந்தனக்காப்பு நீக்கப் பட்டு நரசிம்மர் முழுப் பொலிவுடன் காட்சி தருவார்.

குமரி

கன்னியாகுமரி அம் மனுக்கு ஆராட்டு விழா நடத்துவதும் வைகாசி விசாகத்தில்தான்.

கூழமந்தல்

விஷ்ணு ஆலயத் திருவிழாக்களில் கருட சேவைக்கு சிறப்பிடம் உண்டு. கருட சேவை கண்டால் பெரும் புண்ணியம் என்பார்கள். கூழமந்தல் மற்றும் தஞ்சையில் நடைபெறும் கருட சேவை பிரசித்த மானது. காஞ்சியிலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் கூழமந்தல் அமைந்துள்ளது. கூழம் என்ற சொல்லுக்கு எள் என்று பொருள். கூழம் என்ற ஒரு வகை பலாப் பழமும் உண்டு. இத்தலத் தில் எள், பலா இரண்டும் உண்டு.

ஆசாரியர் சர்வ சிவ பண்டிதர் ஆணையால் இத்தலத்தில் கற்றளி சிவாலயம் ஒன்று உருவா னது. இவ்வாலயம் கங்கை கொண்ட சோழீச்சுரம் எனப்படுகிறது. உத்தர கங்கைகொண்ட சோழ புரம், விக்கிரம சோழபுரம் எனவும் இத்தலம் வழங்கப்படுகிறது. இவ்வூர் குறித்த விவரங்கள் ஆலயத்திலுள்ள கல்வெட்டில் காணப்படுகின்றன.

ஊரின் ஈசான்யத்தில் சிவாலயமும், பஸ்சிமத்தில் விஷ்ணு ஆலயமும் அமைந்திருக்கும் அமைப்பை ஒரு ஊரின் இரு நேத்திரங்கள் என்பர். இதை அனுசரித்து சிவாலயத்துக்கு மேற்கில் பெருமாள் கோவில் ஒன்று அமைத்துள்ளனர். பேசும் பெருமாள் என்பது இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் நாமமாகும். இவரைத் தரிசிக்கும் போது நம்மை நோக்கிப் புன்முறுவலுடன் பேசுவதுபோல தோன்றுவார். நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளின் திருவடிகள் ஒன்று முன்புறம் நோக்கியும் மற்றது பின்புறம் நோக்கியும் அமைந்துள்ளது.

வைகாசி விசாகத் திருவிழாவன்று இந்தப் பேசும் பெருமாள் திருக்கோவிலில் 15 கருட சேவை வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும். 2010-ஆம் ஆண்டு முதல் சோழவரப் பெருமா ளும் இந்தக் கருட சேவையில் கலந்துகொள்வ தால் தற்போது 16 கருட சேவையாக நடைபெறு கிறது. சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல் வேறு திருநாமங்களைக் கொண்ட 16 பெருமாள் உற்சவர்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஒரே இடத்தில் காட்சி தருவது இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.

தஞ்சை

தஞ்சையில் நடக்கும் கருட சேவை வைகாசி விசாக நட்சத்திரத்தில் அல்லாமல் திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறுகிறது. ஆரம்பத் தில் 12 கருட சேவையாக நடைபெற்ற இத்திரு விழா தற்போது 22 கருட சேவையாக விரிவு படுத்தப்பட்டுள்ளது. வைகாசி திருவோண நட்சத்திரத்தன்று தொடங்கி நான்கு நாட்கள் விமரிசையாக நடைபெறும் இவ்விழா, பராசர ரிஷியின் காரணமாக நடைபெறு வதாகச் சொல்லப்படுகிறது.

தஞ்சையின் அழகில் மனதைப் பறிகொடுத்த பராசர ரிஷி இத்தலத் தில் தங்கி தவம் செய்ய ஆரம்பித் தார். பூலோகத்தில் ஏற்பட்ட வறட்சி யின் காரணமாக தென்திசை நோக்கி வந்த தஞ்சாசுரன் தஞ்சையின் வளத்தைக் கண்டு அங்கேயே தங்கிவிட்டான்.

அத்துடன் அசுரர்கள் முனிவர் களுக்குத் தொல்லை தரத் தொடங்கினர். இதனால் பராசரர் நாராயணனை நோக்கித் தவமிருக்கத் தொடங் கினார். பராசரரின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் நீலமேகப் பெருமாளாக அவதாரம் செய்து அசுரர்களை அழித் தொழித்தார். பின் கருட வாக னத்தில் தன் தேவியுடன் பராசரருக்கு காட்சியளித்தார். அப்போது பராசரர் வேண் டிக்கொண்டபடி, இத்தலத் தில் இறைவன் நீலாதேவியு டன் நீலமேகப் பெருமாளா கக் காட்சி தருகிறார். இறைவன் பராசரருக்கு காட்சி தந்த தினம் வைகாசி திருவோணம். இதனையே கருட சேவை தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.

நாகர்கோவில்

நாகர்கோவிலில் அமைந்த குமார கோவிலில் ஒவ்வொரு வருட வைகாசித் திருவிழாவின் ஆறாம் நாளன்று ஆலய நிர்வாகப் பணியாளர் ஒருவர் வள்ளிக் குச் சொந்தமான சொத்துகளின் விவரங்களை வாசிப்பது வழக்கம்.





திருத்தணி, திருச்செந்தூர்

வைகாசி விசாகத்தன்று திருத்தணி முருகன் கோவிலில் வழங்கப்படும் பாதரேனு என்ற சந்தனமும் விபூதியும், திருச்செந்தூரில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதியும் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாகும். பன்னீர் இலையில் காணப்படும் பன்னிரு நரம்புகள் முருகனின் பன்னிரு கரங்க ளாகக் கருதப்படுகின்றன.

வைகாசி விசாகத்தன்று பிற கடவுள்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றாலும் அது முருகனுக்குரிய திருநாளாகவே கருதப்படுகிறது.

அன்றைய தினம் பல்வகை காவடிகளை எடுத்துக்கொண்டு பக்தர்கள் கால் நடைப் பயணமாக முருகன் ஆலயங் களுக்குச் சென்று வேண்டுதல் நிறைவேற்றுவர்.

அன்றைய தினம் திருத்தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே கூட முருகனை வழிபடலாம். முதலில் அவர்கள் ஸ்நானம் செய்து, திருநீறணிந்து முருகன் படத்தை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். பின் நிவேதனப் பொருட்களை வைத்து தூப தீப நைவேத்தியம் செய்ய வேண்டும். முதலில் விநாயகர் அகவல் பாடி, பின் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், காயத்ரி மந்திரம், கந்தர் அனுபூதி சொல்லி பூஜிக்க வேண்டும். சுப்ரமணிய ஷோடச நாமாவளி களையும் கூறலாம். இதன்மூலம் முருகனின் பூரண அருளைப் பெற்று பயனடையலாம்.



கே. நடனசதாராம்

எழுதியவர் : (7-Jun-17, 8:28 am)
பார்வை : 178

மேலே