அழகு

முன்னிரண்டு பற்களாலே
முந்திவரும் அமுதாலே
கண்ணிரண்டும் சொக்கிப்போக
காட்சிதரும் கனியமுதே..!

நின் மழலைச்சொல்லில்
யாவும் மயங்கிப்போக
யாழும் இனிக்குமா?
மலைத்தேனும் சுவைக்குமா?

பிஞ்சுவிரல் சுவைத்தே
பசியாறும் பஞ்சவர்ணமே..!
நின் பஞ்சுமேனியை
தொட்டுத்தூக்கவும் அச்சமெனக்கு..!
உலகெல்லாம் வென்றாலும்
அழகியுன்முன் துச்சமெனக்கு..!
அழகெல்லாம் உன்னிலிருக்க
உவமையேது அஞ்சுகமே..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (7-Jun-17, 11:27 am)
பார்வை : 88

மேலே