காதல் தெய்வம் கைபேசி

கண்ணும் கண்ணும் கலந்தபின்னே
நம் காதல் மலர்ந்த பின்னே
உந்தன் கைபேசி எண் கிடைத்த பின்னே
நம் இருவரையும் ஆட்டி படைப்பது
நம் கைபேசிதான் அல்லவா
உன் அழகை கவிதையாய் நான் வடிக்க
உன் முன்னே 'டிங்' என்று இசையோடு
எஸ்.எம்.எஸ் ஆக .............
நீயும் அதை கண்டு, படித்து, மகிழ்ந்து
பதில் கவிதை எஸ்.எம்.எஸ் ........
'டிங்' என்று என் கைபேசியில் வந்து சேர
நான் பார்க்க, மகிழ நம் காதல்
வளருது நிலாவின் வளர்மதியாய்
நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தேவன்
நம்மை ஆளும் தெய்வம் கைபேசி
இனிய நம் காதல் மொழியை
நமக்கே பரிமாறி நம்மை வாழவைக்கும்
அதுபோல் கோபத்தில் பொல்லா மொழி
நாம் பதிக்க எஸ்.எம்.எஸ் ஆக
போகுது ...................கைபேசியால்
காதலில் இப்போது ஊடல் வந்து சேருது
நம் காதல் மாறுது தேய்பிறையாக ..!!!!!!!!!!!!!
கைபேசி நம் தெய்வம்......!!!!!!!!!!!!!!
நம்மை, நம் காதலை வாழவும் வைக்கும் தெய்வம்
சற்று தடுமாறினால் வீழ்த்திடும் கூட !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jun-17, 3:58 pm)
பார்வை : 85

மேலே