வருகிறேன் !!

வலிகளில் சிறந்தது நீ தருவது

வானில் ஒலியும் நிலாவே
உன்னை எட்டிப்பிடிக்க ஏகாந்தமும் மலர் காற்றில் வீசும் !

விசைப்படகில் உன் வழித்தேடி வாமணனாய் வருபவன் நான்..

வரும் வழியில் சந்திரனை துளையிட்டு இழுத்து வருவேன்
உன் காலில் சலங்கையிட !

உன் நெற்றியில் சிறுத்துளி நீர் தழர
அதை ஏந்தி பிடிக்கும் தாமரை இலையாய் மாறுவேன்_
மறு ஜென்மமொன்று இருந்தால்..

சத்திரியர்கள் படை சூழ ஒரு சித்திரை திங்களில்
உன் வதனத்தில் திலகமிட வருகிறேன் வசீகரி !

உன் மணவாளனாய் பெண் முகம் காண வருகிறேன் !

வெகுமானமின்றி ஒரு கள்ள பார்வையால் வென்றாயடி எனை வெண்மதி நீ... ❤


_கிறுக்கி

எழுதியவர் : Kanmani Srinivasan (7-Jun-17, 10:24 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 75

மேலே