அன்பாய் நிறைந்து அருள் தரும் தலைவனை மறவாதே

எல்லாத்துக்கும் மேலான நம்மை படைத்த அழிவில்லா தலைவனொருவன் இருப்பதை மறந்து,
ஆளு ஆளுக்கு தலைவனாகத் துடிக்கிறீர்களே மனதை சாத்தானிடம் சமர்ப்பித்த ஞானிலத்தாரே...

காற்றாய் சுவாசமாகிய அவனை மறக்கலாமோ?
வானாய் குடையாகிய அவனை நினைக்காமலிருக்கலாமோ?

சூரியானாகி ஒளி வெள்ளத்தால் உலகை நிரப்பும் அவனை மறக்கலாமோ?
மழையாகி உலகில் பஞ்சம் தீர்க்கும் அவனை நினைக்காமலிருக்கலாமோ??

பசி தீர்க்கும் ருசியான கனியாகி தித்திக்கும் அவனை மறக்கலாமோ?
நிலமாய் தாங்கும் அவனை நினைக்காமல் இருக்கலாமோ??

அகிலமெங்கும் அவனது அரசாட்சி...
உண்மை கண்டு அவனை நாடவில்லை உன் மனச்சாட்சி...
தலைவனாகத் துடிக்கும் நீயெல்லாம் வெறும் கானல்நீர் போன்றக் காட்சி...
உனக்குளிருந்து அவன் தருகிறான் உண்மையான அத்தாட்சி...
உணராது நீ இளைக்கிறாய் அற்ப சொற்கள் முதல் செயல்கள் வரையிலே...

அன்பாகிய உண்மையான தலைவனை மறந்து இவ்வுலகிலே நீயே தலைவனென்று தலைகால் புரியாது வாழ்கிறாயே மானிடா...
உண்மையான தலைவனை அறியாத நீங்களெல்லாம், கோயிலில் ஆடு, கோழிகளைப் பலியிடுதல் போலே,
மாட்டை அறுத்து பங்கிடுதல் போலே அழிந்து போவீர்களே...
இதுவே சத்தியம்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-Jun-17, 8:00 am)
பார்வை : 259

மேலே