வஞ்சிக்கும் நோய்

==================
உல்லாச விடுமுறைகளில்
ஓய்வெடுக்கும் உடம்பில்
உல்லாசமாய் புகுந்து
மருத்துவ விடுமுறை நிராகரிப்பாவதன்
காரணியாகி முதாலித்துவத்துக்கு
தோள் கொடுப்பதற்காக வந்து
நோயாளி இல்லா வைத்தியசாலை
வைத்தியர்களின் வருத்தத்தைப் போக்கும்
நோய்களுக்கான மருத்துவ செலவுகள்
மருத்துவர் செலவுக்கு கைகொடுத்து
குணமாகிய பின்பு வருத்தம்
கொடுக்கின்றன.. ஆம்
மன வருத்தம் கொடுக்கின்றன.
*மெய்யன் நடராஜ்