தந்தையும் மகளும்
அப்பாக்களுக்கு.....
ஒவ்வொரு பெண்ணிற்கும் முதலில் அறிமுகமாகும் ஆண் என்றால் அது அவளது
தந்தையாகத் தான் இருக்க முடியும்..
பெண்களின் மனம் என்றும் ஆசை கொள்வது தன் தகப்பன் போன்ற மணாளன்
தனக்கு அமைய வேண்டுமென்றே..
பெண்ணாணவள் தன் தந்தையிலிருந்தே ஆண் என்ற மறு பாலினத்தை அறிந்து
கொள்கிறாள்..
அப்பாவிலிருந்து தான் ஆணுக்கான தனித்தன்மையினை அவள்
புரிந்து கொள்கிறாள்...
அதிகமான தந்தையர்களின் பிரியத்திற்குள்ளானவர்கள் பெண் பிள்ளைகள்தான்..ஒரு தந்தை தன் மகளை
இன்னொரு தாயாகப் பார்க்கிறான்...
மகளோ தன் தந்தையை உலகத்திலேயே சிறந்த மனிதனாகப் பார்க்கிறாள்..
அவளுக்கு அவள் தந்தை தான் நாயகன்..
அப்பாக்கள் வைக்கும் ஒவ்வொரு அடிகளையும் அவள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பாள்...அவளுக்கு அவள் தந்தை தான் எல்லாமும்...இவர் என்னுடைய அப்பா என்று சொல்லிக் கொள்வதில் ஒவ்வொரு பெண் மகவுகளும் பெருமை கொள்கின்றனர்...அதனால் தான் அவர் தாய்க்கும் மேலான தாயுமானவனாய் பார்க்கப்படுகின்றார்...
ஆனால் அவர் வைக்கும் ஒரு அடி தவறான பாதையில் சென்றாலும் கூட அது அவரது மகள் மீது தான் அதிகமான தாக்கங்களை ஏற்படுத்தும்...
காரணம் அவளது முன்மாதிரியாக என்றும் இருப்பது அவள் தந்தைதான்...
அப்பாக்களின் பாதை தவறும் போது மகள்களின் வழிகளும் திசைமாறிவிடுகிறது..
ஆகவே அப்பாக்களே,உங்கள் மகள் உங்களைத்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை என்றும் மறவாதீர்கள்...அவளுக்கு வழிகாட்டும் வழிகாட்டியும் நீங்கள்தான்...வழிநடத்தும் ஆசானும் நீங்கள் தான்...தோள் கொடுக்கும் முதல் தோழனும் நீங்கள் தான்...
உங்கள் சிறு தவறுகள் கூட அவள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும் என்பதை மறவாதீர்கள்...அவர்களின் நம்பிக்கைக்குரியவர்கள் என்றும் நீங்களே...அதை வேரோடு பிடுங்கிவிட்டால் மீண்டும் நட்டு வளர்ப்பதென்பது இயலாத காரியமாகிவிடும்...
மகளைத் தாங்கும் மடியாக இருங்கள்,அவர்கள் உங்களைத் தாங்கும் தாயாக இருப்பார்கள்...
(அதிகம் ஒரு பெண்ணிற்கு அப்பாக்கள் எப்படியோ அது போல் ஒரு ஆணிற்கு அம்மாக்கள்)
....சகி....