அதுவரை, அவள், அவனுடைய இரண்டாவது மனைவி, அவன், அவளுடைய இரண்டாவது கணவன்

அதுவரை, அவள், அவனுடைய இரண்டாவது மனைவி, அவன், அவளுடைய இரண்டாவது கணவன்
====================================================================

கடந்த இரண்டாம் தேதி என் வீட்டு கிரகப்ரவேசத்திற்கு முக்கியமான நண்பரை அழைக்க நாங்கள் அங்கு சென்றிருந்தோம் , அழகான மரங்களடர்ந்த ஊர் அது கற்பூர நகர், அங்கே இன்னொரு உறவினர் இருப்பதை எதேச்சையாகத்தான் அறிந்துகொண்டதும், அங்கும் சென்று பத்திரிகை வைத்துவிட்டு, அந்த வெராந்தாவை கடந்தபோது எப்போதோ கேட்டு அலுக்காத அந்த குரல் ஆம் ,,,

அது அதே குரல் தான்,
"
அவளை எனக்கு நன்குத் தெரியும்,

எங்கள் ஊரில் ஒரு இடைநிலைக்காரன் பணக்காரனின் ஏக மகள் ,

முன்னும் பின்னுமென இரண்டு சகோதரர்களோட பிறந்தவள்,
அன்று அவளைப்பார்த்த நிலையில் அவளுடன் மற்றவன் ஒருவனையும் காண்கிறேன், அது அவளுடைய இளைய சகோதரன்,
அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள்,
சிலபோது கடந்த முறையெல்லாம் நான் ஊருக்கு போனப்போ, ஊராளுங்க அரசப்புரசலா பேசிக்கிட்டாங்க, முன்னமே ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஒரு குழந்தை ஆனதுக்கப்பறம் அதுவும் அத்துப்போச்சி, விசனம் தாங்காம இவங்கப்பா நிறைய நகையும் பணங்காசும் கொடுத்து இன்னொரு ஜீப் டிரைவருக்கு கட்டிக்கொடுத்தாரு, அவனும் ஒரு குழந்தை ஆனதும் அத்து விட்டான், இப்படி அப்படின்னு பேச்சு துர்நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது,

யாரவள்,

நாலு வருஷத்துக்கு முன்னாடி, அவளை அப்பநாயக்கன்பாளையத்தில் தான் ஒரு கம்பரா வீட்டில் பார்க்கிறேன் , இரண்டு வயது பெண் குழந்தையுடன், மேலும் கர்பமாக இருந்தாள், அன்றும் இன்றும் அவளைச்சூழ்ந்து அழகான வாசமிருக்கும், அந்த வாசனைதான் அன்று அவளை எனக்கு அவள் அங்கிருக்கிறாள்போல் என்பதை காட்டிக்கொடுத்ததும் கூட,

ஆம்,, அங்கிருந்தவன், அவள் அவனுடைய இரண்டாவது மனைவி, அவன் அவளுடைய இரண்டாவது கணவன்,

பேச்சிலும் பார்வையிலும் சர்க்கரையை தூவியிருந்தான், நிறைய பவுடர் பூசியிருந்தான் முகத்திற்கும் மனதிற்கும் என, பணம் காய்க்கும் மரத்தை அல்லவா கொண்டு வந்திருக்கிறான், அன்று என்னை அவன் அவளிடம் அதிகம் பேச அனுமதிக்கவில்லை, அந்த வாசனையை அரைகுறை நுகர்ந்தே வெளியேற்றப்பட்டேன்,

சரி யாரவள்,

அன்று இரவு வீடு வந்திட்டு, மனசுக்குள் அதுவரை இருந்த எல்லாம் தொலைச்சிட்டு அவளை மட்டும் வைத்துப் பார்க்கிறேன், பழைய நடிகை சரிதாவின் சாயல், நிறம் மாநிறம், சரிதா அளவுக்கு கருப்பும் அல்ல, என்னைவிட இரண்டு வயது மூத்தவள், பெயர் ஏதோ ஒரு நல்ல பெயர்தான் என்னோடு இருக்கட்டும்,

அவளும் நானுமே, எப்போதும் பள்ளிக்கூடத்திற்கு ஒன்றாக போவதும் வருவதுமாக இருப்போம்,
அதுவரை என்னோடு பேசாமல் போன பெரிய பெரிய அண்ணன்மார்கள் எல்லோரும் என்னோடு கரிசனமாகப் பேசுவார்கள்,

சிலப்பேர் அவளையும் என்னையும் தாறுமாறாக சேர்த்துவைத்து ஊருக்கு ஒதுக்குப்புற குட்டிச்சுவர்களில் காம சித்திரமே வரைந்திருப்பார்கள்,

இன்னும் சிலப்பேர், என்னிடம் நிறைய செண்டிமெண்ட் பேசி பேசி எனக்கொன்றுமே புரியவில்லை என்றாலும் விடுவதாய் இல்லை ,,, பின்னாலேயே நடந்து அவளுக்கு கடிதம் கொடுக்குமாறு கெஞ்சுவார்கள்,

ஊர் மத்தியில் அவளுடைய சைக்கிள் பெல்லிற்கும் என் சைக்கிள் பெல்லிற்கும் ஒரே சத்தமிருக்கும்,

சிலர் என்னிடம் பச்சையாகவே கேட்டிருப்பார்கள்,

நீங்க ரெண்டு பேரும் நடக்கும்போது, உரசிக்குவீங்களா,

அவ எப்போவாவது உன்னை காமப்பார்வை பார்த்திருக்காளா,

நீ எப்போவாச்சும் அவள் கிழிசல்களுக்குள்ள உன் கண்களை இறக்கி விட்டிருக்கியா,

ரெண்டு பேரும் தலைகுனிஞ்சு நடந்து போறப்போ என்னெல்லாம் விரசமா பேசுவீங்க உங்களுக்குள்ள,

ரெண்டு பேரும் ஸ்பெஷல் க்ளாஸ் னு சொல்லிட்டு டீச்செடி ஓரமா ஒதுங்கிருக்கீங்களா, அப்போ உங்க ரெண்டு பேரோட சைக்கிள் டயரும் ஒண்ணுக்கு மேலே ஒண்ணா ஒரசி சுத்திருக்கா,

இம்மாதிரி புளித்த விமர்சனங்களையும் கடந்து அவளுடன் பள்ளிக்கூடத்திற்கு போயிருக்கேன், இதை அவகிட்ட சொல்லியும் இருக்கேன், பரவால்ல நீ வா என்கூட, யார் என்ன பேசினாலும் பேசட்டும் ன்னு சொல்லுவா அப்போல்லாம்,

அப்போதெல்லாம் அவள் வீட்டிலோ அல்லது என் வீட்டிலோ இரவு வீஸீயாரில் புதிய சினிமாக்கள் காண்பது என்றால் நான் அவளோடு இல்லை அவள் என்னோடு ஒரே போர்வைக்குள்ளேயே புதைந்து எங்களையும் மறந்து கைக்கால்களிட்டு உறங்கி விழித்த இரவு விடியல்கள் எத்தனையோ கணக்கிலில்லை ,

காலமாற்றம் என்று சொல்வதா பருவ மாற்றம் என்று சொல்வதா,

எனக்கு மீசை அரும்புவிட எழுந்த சில நாட்களில் ஒருநாள், நான் சற்று நேரத்தே கிளம்பி அவள் வீட்டிற்கு சென்றுவிட்டேன், அவள் இன்னும் ரெடியாகவில்லை,

அரக்க பறக்க குளித்து முடித்த டவலோடு, அவள் அறைக்குள் நுழைந்தாள் உடை மாற்றியவள் கதவைத் திறந்தாள்,

ஏதோ ஒரு குறை காண்கிறேன் என்று சொன்னேன் அவளிடம்,

என்ன என்று எல்லாமே சரி பார்த்தாள்,

அவளால கண்டுபிடிக்க முடியவில்லை,

பிறகு நானே சொன்னேன், பொட்டிட மறந்திட்டையே ன்னு சிரிச்சேன்,

அவளும் தெத்துப்பல் தெரிய சிரித்தவள்,

வா உள்ளே என அழைத்தாள்,

என்னையும் அழைத்து நிலைக்கண்ணாடியிடம் சென்றாள்,
கீழே உள்ள மேசை ட்ராயரைத் திறந்து காண்பிக்கிறாள்,

எத்தனைவிதமான சாந்து பொட்டுகள்,

கருஞ்சிவந்த இளையவட்டமுள்ள,
ஒரு சாந்துப்பொட்டை எடுத்தவள் நிலைக்கண்ணாடி முன் அமர்ந்தாள்,

பொட்டிட்டவள் எழ எத்தனிக்கையில்,
அவள் வலது கைய்யிற்கு எந்த பிடிமானமும் கிடைக்கவில்லை ,,,

ஜிப்பிட்டு அடைத்து, அக்கணம் விறைப்பற்றிருந்த என் ஆண் குறியை,
அவள் உள்ளங்கைகளால் பிழிந்தெழுந்தாள்,

சில நிமிடங்கள், சில நொடிகள், சில கணங்கள், சில பொழுதுகள், சில நாட்கள் சில மாதங்கள், சில வருடங்கள் என, நெருப்பணிந்தே அவளுடன் என் நகர்வுகள் இருந்தன அதன்பின்னால் ,

என் கனவிலும் சிந்தையிலும் எத்தனையோ முறை புணர்ந்தோம் அதன்பின்னால்,

எதையும் அவளிடம் கேட்கவிருப்பமில்லை,

அவளை நாடி என்னிடம் வருவோர்மீது வெறுப்புறுகிறேன், சதா சந்தர்பம் தேடி திரிகிறேன் அவளை நெருங்க அவளை உரச,

பலமுறை வீஸீயாரில் புதிய படங்களை வேண்டுமென்றே வாங்கிக்கொண்டு வந்து அவளையும் அழைத்து பார்த்துவிட்டு ஒன்றாகவே உறங்கினோம்,

தொடவேண்டுமாய் ஏங்கும் விரல்களுக்கு ஏனோ இந்த நடுக்கம்,

அது பயமா தெரியவில்லை, இருக்கலாம், தவிர்த்திருக்கிறேன்,

அம்மாதிரி நேரங்களில், தானே ஒழுகும் என் ஸ்கலித ஊற்றின் பிசுபிசுப்பு, அவள் பாவாடையை நனைத்திருப்பதை தானே உணர்ந்திருப்பாளா தெரியவில்லை,

காலம் இப்படியே ஓடியது, அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள், எங்கள் ஊரில் ஒரு பெண்ணிற்கு திருமணம் என்றால் அப்பெண் ஊரிலுள்ள எல்லோருடைய வீட்டிற்கும் திருமணத்திற்கு முதல்நாள் சென்று பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம், அப்படித்தான் எங்கள் வீட்டிற்கும் வருவாள் என்பது தெரியும் எங்கள் வீட்டைத்தாண்டி கொஞ்சம் கீழே காட்டுவழி நடந்தால் இன்னும் இரண்டு மூன்று அவளுடைய முக்கிய உறவினர்கள் வீடு இருக்கும், எப்படியாவது அவள் கூட துணைக்கு அந்த வீடுவரை போகவேண்டும், மனதில் உள்ளதை சொல்லி பாரத்தை குறைத்து மன்னித்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணியே காத்திருந்தேன்,

நினைத்ததைப்போல வந்தாள், எங்கள் வீட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுவிட்டு வா கீழே போகணும் எனக்கு துணைக்கு வா என்றாள், நானும் அவளும் மாத்திரம் நடக்கிறோம்,

பாதை இருள் சூழ்ந்திருக்கிறது என்பதால் அவள் முன்னே நடக்க பின்னே நடந்த என் கைகளை
பற்றிக்கொண்டாள்,

என் விரல்களில் நடுக்கம் உணர்ந்தவளாய்,

பயமா, எனக்கேட்டாள்,

இல்லை என்றேன்,

பின் ஏன் உன் விரல்கள் ஸ்தம்பித்து தாளமிடுகின்றன என்றாள்,

இனிமேலும் அடக்க முடியாதென விரைந்து
சொல்லி மன்னிக்கக்கோரி அழுதேன்,

இன்னமும் நாற்பது நிமிடங்களே உள்ளன, அவங்க வீட்டுக்கு போயி திரும்ப அதிக நேரமானால் ஊராளுங்க என்னை தேடி வர ஆரம்பிச்சிடுவாங்க, அதுக்குள்ளே என்னை என்ன செய்ய முடியுமோ செய் என்றாள்,

எத்தனையோ வாய்ப்புகள் உன்னிடமிருந்தும் ஏன் அதையெல்லாம் தவறவிட்டாய் என்றாள்,

எல்லாமே உனக்கு சொல்லித்தான் தெரியணுமா,

ஒரு பெண் எப்படிப்பட்ட ஆண்மகனையும் ஒரு எல்லையிலேயே நிறுத்திவிடுகிறாள், ஆனா உனக்கும் எனக்கும் என எல்லையே இருந்ததில்லை,
அதை நான் விரும்பியதும் இல்லை, இப்போ வந்து கேக்கறியேடா ன்னு சொல்லி திட்டி விட்டா,

அந்த நிமிடங்களை கரைக்க விரும்பவில்லை,

அந்நேரம் ஒரு மல்லிகைக் கசங்கலை அங்கே விரும்பவில்லைதான், ஆனாலும்

அப்படியே அள்ளிக்கொண்டேன்,

அதெல்லாம் அங்கேயே முடிந்துவிட்டது,

அந்தக் காட்டில் மழைப்பொழிந்தது, ஒருமுறையோ இருமுறையோ நினைவிலில்லை,

அதன் பின் அவளை எங்கேயும் சந்திக்கவில்லை,

வேறூருக்கு சென்றுவிட்டாள், போர்டிங்கில் நான்,

அன்று பத்திரிகை வைக்க போனபோது, அவள் அந்த குழந்தைகள், அவளுடைய சகோதரன், அவளுக்கே உரிய அந்த பெயர்த்தெரியாத வாசனை என அவளுக்கும், என் மனைவியை அறிமுகம் செய்தவன், ஒரு பத்திரிக்கையை வைத்துவிட்டு வீடு திரும்பினேன், இரவு மின்விசிறியும், காற்றுப்பதனியும் இயங்கியும் கூட உறங்க மறுக்கிறேன்

===============================================

""எல்லாம் அணைத்துவிட்டு ஜன்னல் திறக்கிறேன்,
அங்கிருந்து கொஞ்சம் அகலே,
பாலியம் என்னும் ஒற்றை மரம் தெரிகிறது,
சருகான எத்தனையோ இலைகளுக்கு நடுவில்,
ஒரு தளிரிலையின் பச்சையத்தில்,
கோடிட்டு எழும்புகின்றன,
குறுக்கும் நெடுக்குமாக, இலை வருடியின் பச்சை நரம்புகள்""
===============================================================

ஆம், அதுவரை
அவள், அவனுடைய இரண்டாவது மனைவி, அவன், அவளுடைய இரண்டாவது கணவன்,

ஆனாலும் ஏனோ அவளை மனம் உள்ளூர மதிக்கிறது, நேசிக்கிறது,

சரி தப்பு ன்னு பஞ்சாயத்து பண்ணாதீங்க, ஒரு பதிவா நினைச்சு கடந்து போங்க ஆமா ம்ம் ,,

“பூக்காரன் கவிதைகள்”

எழுதியவர் : அனுசரன் (9-Jun-17, 1:43 am)
பார்வை : 601

மேலே