பள்ளி படிப்பு
கதிரவனின் தினபிறந்தநாள் !
மகிழ்ச்சியில் கத்தும் சேவல் !
காலை நேரத்தில் குரல் பாடும் - குயில்
தன்னுடைய பங்கை தெரிவிக்கும் - மயில்
முகம் கழுவும்- கடல்
சீறிப்பாயும் - ஆற்றுநீர்
தூய்மையான காற்று
அழகை காட்டும் பூக்கள்
மறையும் பனி!
அம்மாவின் அன்பு கூவல்
சிறுபிள்ளைத்தனம்
உடுத்திய வெள்ளை நிற சட்டை
கையில் மஞ்சள் பை
பசியறியாத வயது
செல் செல் பள்ளிக்கு செல் என்ற அமுத வார்த்தை
சொல்லும் அம்மா,அப்பா
கண்ணீருடன் செல்லும் நான்
பள்ளிவாசல் செல்லும் வரை
அருகில் தோழன்,தோழி
என் குரும்பை தாங்கி கொள்ளும்
ஆசிரியை
சிறு சிறு விளையாட்டு ,சண்டை
அதிக மதிப்பெண் என்ற சபதம்
மாலை கைகோர்த்து செல்லும் -தோழன்
மறக்கும் தினம் வீட்டுப்பாடம்
வாங்கும் பெரம்பு அடி
கையில் இருக்கும் சில்லறைக்கு - பாட்டி கடை,ஐஸ் வண்டி
வருட வருட தேர்ச்சி
இழந்து இழந்து போனது
பள்ளிகளும்
நோக்கி சென்றேன் முதுமையை
திரும்பி பார்த்தேன் பள்ளிக்காலத்தை
கிடைக்காத நியாபக காலம்
பள்ளிகளும்
ஆக்கம் - ராஜூ