ஆண் பெண் நட்பு

ஆண் மகனே தெரிந்து கொள்
உடல் வாகு வேறாகலாம் ஆனாலும்
பெண் அவளும் உன் போல
அன்றி வேறில்லை.....
காமம் மட்டுமே எதிர்ப்பார்க்காதே
எண்ணில் அடங்க சுகம் உண்டு
அவளிடத்தில்.....
சகோதரனாக பழகி பார்
சாகும் வரை உடன் இருப்பால்....
தந்தையாக பழகி பார்
தன்னலம் பார்க்காமல்
தவம் கிடப்பாள்.......
தோழனாக பழகி பார்
நீ தோற்கும் போதெல்லாம்
தோள் கொடுப்பாள்.......
காமம் என்பது ஐந்து நிமிட சுகம்
கன்னியமாக பழகி பார்
காலமெல்லாம் தூக்கி பிடிப்பாள்
உலகின் தலை சிறந்த ஆண்மகன்
நீ என்று.......
🌹🌹🌹🌹Samsu🌹🌹🌹🌹