வாழ்வெனும் டோட்டல் பேக்கேஜ்

வாழ்வில் பயமறியா
நண்பன் ஜெயமோகன்...
தெளிந்த நீரோடை உன் பாதை...
எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவாய்
பேராசை தவிர்த்து...

உனது பிறந்தநாள்
ஜூன் பத்து...
உன்னிடம் உள்ள
அருமையான நட்பு
எங்கள் சொத்து...

ஒரே ஒரு நண்பனை
எப்போதோ பார்ப்பது சிறப்பு...
நிறைய நண்பர்களுடன்
நினைத்த மாத்திரத்தில்
எப்போதும் பேச வைத்தது
உனது சிறப்புகளில் சிறப்பு...

பார்ப்பதற்குக் கடினமானவன்
எனும் தோற்றமயக்கம்
தவிர்த்துப் பார்த்தால்
தெரியும் உன் இளகிய மனசு..
எங்கு சென்றாலும் வயதானதை
நினைவு கூறும் இவ்வுலகில்
கல்லூரிக்கால நண்பர்களிடம்
நித்தம் பேசுவதன் மூலம்
இன்னும் இளமையை இளமையாய் வைத்துக் கொள்ளும் சூட்சுமம்
தெரிய வைத்தாய்...

வாழ்வில் இன்பங்கள்
கூடுகிறது நட்புணர்வால்...
எத்தனை துன்பங்கள் வரினும்
சாய்ந்து கொள்ளத் தோள்
வேண்டும் போதெல்லாம்
பகிர்ந்து கொள்ள
வார்த்தைகள் கிடைக்கிறது
நண்பர்களால்...

புவியீர்ப்பு விசை
பொருட்களை பூமியிலிருந்து
விலகா வண்ணம்
பார்த்துக் கொள்கிறது...
நண்பர்கள் மீதுள்ள
உந்தன் நட்புவிசை
நண்பர்கள் விலகாவண்ணம்
பார்த்துக் கொள்கிறது...

கல்லூரியில் படிக்கும்போதே
கன்னியாகுமரி மாவட்டம்
தாண்டி பல வட்டங்களில்
நண்பர்களை சேர்த்ததில்
முதன்மையானவன் ...
அதை இன்றுவரை
பேணிக் காப்பதில்
இணையில்லாதவன் நீ...

சுற்றுலா சென்றுவர
ஏ டு இசட் அம்சங்களுடன்
டோட்டல் பேக்கேஜ்
பயணத்திட்டம் தரும்
ஏஜன்சி பார்ப்பது
மனிதர்களின் வாடிக்கை...
வாழ்வெனும் டோட்டல்
பேக்கேஜ்ஜில்
எல்லா அம்சங்களும்
சிறப்பானதாய் இருக்க
அருமையாய்த் திட்டமிடுவது
உனது வாடிக்கை
ஜெயமோகன்...

இன்னும் நிறைய உள்ளது
நண்பா உன்னைப்பற்றி
நல்லவை கூற...
வரும் ஐம்பது ஆண்டுகளின்
பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு
மிச்சம் வைத்து வாழ்வில்
என்றும் நீ உச்சம் தொட்டு
எல்லா வளங்களுடன்
பல்லாண்டு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்...
எல்லா வளங்களும்
உனதாகட்டும்... அதில்
ஆரோக்கியம் முதன்மையாகட்டும்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஜெயமோகன்...
😀🌷🙏🌹🌺🍇🌷🍰🎂

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (11-Jun-17, 10:35 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 139

மேலே