ஆண் தோழன் கொண்ட பெண் பெரிதும் தூற்றப்படுவதேன்
முத்தமிழ் உரைத்த மூதாட்டியவளுக்கு
அதியமானுடன் அழகிய நட்புண்டு
பெண்ணவள் புனிதமாய் போற்றப்படுவதால்-அன்று
ஒளவை தூற்றப்படவில்லை
இடைக்காலத்தில் எழுந்த ஆணாதிக்கத்தால்
அடுக்களையில் சிறைப்பட்ட -பெண்
ஆயுதம் ஏந்தி தேசம் காப்பதலும்,
அறிவை பேணி பொருளாதாரம் பெருக்குவதாலும்,
ஆகாயம் தாண்டி அண்டத்தை ஆராய்வதாலும்,
பொறாமை கொண்ட சிறுமாந்தர்
பெண்ணடிமை நிலைநிறுத்திட -பெண்ணவள்
மீதினில் சேரிரைத்திட்டு
தூய நட்பினை அழிப்பதும்
ஆணாதிக்கத்தாலே
தூற்றுவாரை மதியாமல் நட்பு கொண்டால்,
காமுகன் எவனோ பகுத்தறியாய் என்று
சுற்றம் கடிவதுவும் அகத்தெஞ்சி நிற்கும்
ஆணாதிக்கத்தாலே....
பெண்ணிய ஒலி பாரெங்கும் ஒலிக்கும்
இக்காலத்தில்,
உள்மனதில் விதைக்கப்பட்ட அடிமை விலங்குடைக்காத - அறியாப்பெண்ணாலே
ஆண் தோழன் கொண்ட பெண் பெரிதும் தூற்றப்படுகிறாள்.....