நிலை மண்டில ஆசிரியப்பா
பாரதிதாசன் சான்றிதழ் போட்டி எண் :- 06
தலைப்பு :- நன்றி மறவாமை நன்று !!! --- மரபு கவிதை
பா வகை :- நிலைமண்டில ஆசிரியப்பா .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
படைப்பு :- சொந்த படைப்பு .
நன்றி மறவாமை நன்று !
குணமுடன் குடிமையும் குடும்பம் குன்றிடா
மணமுடன் மலரும் மானிட ருலகினில்
பணத்தை நோக்காப் பண்பை நோக்கிடு
முணர்வே நன்றியை உணர்த்தும் நல்லதோர்
சிறப்பாம் . வந்திடும் சினமும் மாறிடும் .
உறவைப் பற்றிட உறுதியாய் நலமாய்
நீண்டிடும் தரணியில் நிலைபெறும் தினமும்
வேண்டும் செல்வம் வேகமாய்த் தழைக்கும் .
மூளும் தீமைகள் முழுதும் நீங்கும்
ஆளும் நட்பே ஆட்சியும் புரிந்திடும் .
உடுக்கை இல்லா னுள்ளமாய்த் தடைபடா .
இடுக்கண் மாற்றிடும் இனிமை நட்பினை
மறந்திடில் பெருமையை மகிமையை அழிக்குமாம் .
இறந்திடும் நிலையிலும் இறவா நன்றியை
உறவாய்ப் பேணுதல் உயர்வைத் தந்திடும் .
பிறந்திடும் மனிதரும் பிழையென நினைந்துமே
துறந்தால் நட்பை துன்பமே பெருகிடும் .
சிறந்தவர் இனமாய்ச் சிந்தை செல்ல
நன்றியை மறவா நன்னெறி வழியில்
மன்றி லென்றுமாய் மலரும் வாழ்வே !