விதி

முத்திரையாய்
நொடிப்பொழுதில்

உன்முக வரியை
என் மனதில்

'நீ '

பதித்த பின்னே

உன் முகவரியை

தேடியதே என்
இதயம்!

பதிய மறுத்த
முக வரிகள்,

வரிசையாக,
கடந்துப்போக

நீ மட்டும் என்
மனதில் பதிந்த

மாயம் என்ன?

ஓடு மீனோட
காத்திருந்த

கொக்கு போல

அடையாளம்
கண்டதே

உன்னை மட்டும்
என் மனம்

என்ன விந்தை
இது?

காற்றாய் புகுந்தாய்
என்னுள்ளே!

தண்ணீராய் கலந்தாய்
எனக்குள்ளே!

பின் ஏன்?

தள்ளிப் போனாய்
அதற்குள்ளே?

என் விதியா?

இது காதலின்
விதியா?
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (12-Jun-17, 2:35 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vidhi
பார்வை : 274

மேலே