முத்துச்சிப்பி சிரிப்பழகு
தத்தித் தவழ்ந்து நடைபழகி
***தங்க ரதம்போ லசைந்சைந்து
சொத்தாய் வீட்டில் வளையவந்து
***சொர்க்கம் காட்டும் மழலையதன்
முத்துச் சிப்பிச் சிரிப்பழகு
***முதலாய்ப் பேசும் மொழியழகு
முத்தங் கொஞ்சு மிதழழகு
***முட்டை விழியும் மிகவழகே!!