மாறிப்போன மாரி

...மாறிப்போன மாரி...

நீலத் தாவணி
கட்டியிருக்குது வானம்
நீர்க்கடிதம் எழுதி
மண்ணுக்கனுப்பிடும் காலம்
மார்கழியின் மழையை இன்னும் காணோம்
மாரியினை மறந்தவராய்ப் போனோம்

குளங்களுக்குள்
கணம் வரையிது கோலம் - பனி
கூதலாலே நடு நடுங்குது தேகம்
பயிர்களுக்குப்
பகலிரவாய்த் தாகம் - இதை
பார்த்தும் ஏனோ
பொழியவில்லை மேகம்

காலநிலை
காட்டுகின்ற ஜாலம்
காணவில்லை பதினாறில் நாமும்

ஈரமில்லா
இதயங்களால் தானோ
இந்த நிலைக்காளானோம் நாமும்
வானம் பார்த்த
பூமியெல்லாம் பாவம்
வரளுதடா யாருடைய சாபம்

எம்கரங்கள்
தானிதற்குத் தூபம்
இட்டதை நாம்
ஏற்றால் மழை தூவும்

இறக்காமத்து வானப்பாடி
ஏ.ஆர். பைசல்

எழுதியவர் : இறக்காமத்து வானப்பாடி ஏ.ஆ (15-Jun-17, 12:16 pm)
சேர்த்தது : ஏஆர் பைசால்
பார்வை : 194

மேலே