எனக்குள் உன் நினைவு
சித்திரமாய் என் மனதில் சிம்மாசனமிட்ட
கட்டிளம் காளையே என் கனவு மன்னவனே
சென்ற எனதுயிரை மீட்டிக் கொடுத்த உறவு வள்ளலே
காய்ந்து சருகாகிப் போன என் மனதை
உன் ஞாபக நீர் விசிறல்களால் உயிர்ப்பித்துக் கொடுத்தாய்
என் குருதி நாளம் யாவிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறாய்
பேதை நான் உன் பிரிவினால் நொந்து நூலாகிப் போகிறேன்
என்று நீ வருவாய் என்னிதயக் காவலனே
உன் அருகாமை ஸ்பரிஷம் வேண்டி உறவுப் போதையால்
நான் வெந்து கிடக்கிறேனே என் ஏக்கம் தீர்க்க ஓடி நீ வருவாயா
அஸ்லா அலி