முன்னாள் காதலி

தொலைந்து போன என் முன்னாள் காதலி !
இன்று !
இன்னொருவன் மனைவி என் கண்முன்னே
எப்படி இருக்க ?
நீ எப்படி இருக்க ?
என்னிடம் இருந்து புன்முறுவல் !
அவளிடம் இருந்து கண்ணீர் துளி !
புன்முறுவலும்
கண்ணீர்துளியும்
எத்தனையோ வார்த்தைகளை
தாங்கிக்கொண்டிருந்தது
விடைபெற்றோம் !