காற்ராகிய உன்னிடம்,நெருப்பாகிய நான் கொண்ட காதல்
என்ன சொல்வேன் !! ஏது சொல்வேன்!!
நீயாக மாறி நிற்கும் என்னை...
கண்கள் மூடி காணும் போதும்
காட்சி எல்லாம் உந்தன் முகம்...
என்னை விட்டு தூரம் உன் பாதம் நடக்கும்...
இருந்தும் உன் தேக சூடு மட்டும்
என்னுள்ளே கிடக்கும்...
காதலும் அள்ளி தருகிறாய்
பின்பு ஏன்னோ!!
தனிமையிலும் தள்ளி விடுகிறாய்...
தாகம் கொண்டு நான் தவிக்கிறேன்...
மோகம் எல்லாம் நான் மறக்கிறேன்..
போதும் என்று உன்னை வெறுக்கிறேன்...
என்னையும் என்னுள் மறுக்கிறேன்...
இருந்தும் உன்னை காணும் நேரங்கள்
இவையல்லாம் வெறும் கோயில் தீபங்கள் ...
அனைந்தாலும் மீண்டும் ஒளி ஏந்திடும்
நீ அனைத்தாலே என் காதல் மெருக்கேறிரும் ...
சில காதல் உறவாகும்...
சில காதல் பிரிவாகும்..
நம் காதலோ புதிதாகுதே!!!
கோலம் போல் அது தினம்மாறுதே..
காலம் எல்லாம் வண்ணம் சேர்க்குது....