தள்ளி போகாதே
தள்ளி போகாதே என்னில் இருந்து என் உயிரே
நீ பேசிய காதல் மொழியை ஊமையாக்கி
உன் உள்ளத்தில் இருக்கும் காதல் கருவை மறைத்து
என் உள்ளத்தை நோகடித்து தள்ளி போகாதே
நீ எதை வேண்டுமென்றாலும் கேள் அன்பே பிரிவை மட்டும் தந்து விடாதே
நான் உன்னோடு கொண்ட காதல் கற்பனையானது அல்ல
என் உயிரானது என்பதை மறந்து விட்டாயா?
நீ பேசி சென்ற காதல் மொழியால் மகிழ்வடைந்த என் உணர்வுகளும்
எப்படி சோகத்தை உணரும்
எங்கள் காதலுக்கு வந்த சங்கடத்தை எண்ணி
காதலை மௌனமாக்கிவிடாதே