காதல்-இது ஒரு கனாக்கால காதல் பயணம்

கொங்கு தமிழ் நாட்டில்
கொஞ்சும் தமிழ் பேசி
வடிவழகு தங்க சிலை
உயிர்கொண்டு எழுந்ததுவோ
அன்னமும் நாண
கலையான நடைகொண்டு
அசைந்து அசைந்து
தென்றலாய் வந்ததுவோ
வட்ட வட்ட வெண்ணிலவு
தந்த முகத்தில்
இடது கன்னத்தில்
அழகிய சின்ன
மச்சம் ஒன்று கண்டதுவோ
இவள் ஒரு பேரழகி மட்டுமல்ல
ஒரு தனிப்பிறவி என்று
மச்ச சாத்திரமும் சொன்னதுவோ
வஞ்சி அவள் என்னருகே
வந்து நின்றதுவோ -எந்தன்
வலது காதோரம் ஏதேதோ
காதல் மொழி கொங்குத்தமிழில்
ஓதி விட்டதுவோ -அம்மொழியும்
காதல் வேதமோ இது என்று
எனக்கோர் மயக்கம் தந்ததுவோ
வஞ்சியே உன்னை மயக்கம் தெளிந்து ,
எட்டிப்பிடித்து, கட்டிப்பிடிக்க
எண்ணியபோது புள்ளி மான் போல்
துள்ளி துள்ளி ஓடிவிட்டதுவோ
என்மனதை உன் மனதில்
வைத்து பூட்டி எங்கோ
மறைந்ததுவோ...................
இந்த எந்தன் கனாக்கால
காதல் பயணம் இன்னும்
தொடர்ந்திடுமோ
மீண்டும் துயில் வந்து
என்னை எப்போது ஆட்கொள்ளுமோ !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jun-17, 4:26 pm)
Tanglish : kaadhal
பார்வை : 107

மேலே