வாசிக்கும் உன்னை ரசித்துக்கொண்டிருப்பது

என் கவிதைகளை ஒவ்வொன்றாய்
உன் இமைகள் சிமிட்டாமல்
உன் இதழ்கள் அசையாமல்
அழகாய் வாசித்துக்கொண்டிருக்கிறாய் !
அதில் "இரட்டிப்பு மகிழ்ச்சி" எனக்கு !
என் கவிதைகளை நீ "வாசித்துக்கொண்டிருப்பது"
எனக்கு பிடித்த "ஒற்றை கவிதை " உன்னை நான்
அவ்வேளையில் "ரசித்துக்கொண்டிருப்பது "