kadhal

" திரும்பி பார்க்கிறேன் "

நான் விட்ட கண்ணீரை திரும்பி பார்க்கிறேன்
அதில் நீ இல்லை
என் சிரிப்பை சற்றே திரும்பி பார்க்கிறேன்
அதில் நீ மட்டுமே

" உன் இடைவெளியில் என்னை புதைக்கிறான் "

உன் விரல் இடைவெளில்
என்னை புதைக்கிறேன்
அதுவும் எனக்கானது

"நீ மட்டும் "

ஆயிரம் வார்த்தைகள்
உன்னை நினைவு கூறலாம்
ஆனால், எனக்கு அது தேவை இல்லை
நிஜமான நீ மட்டும் போதும்

" சீக்கிரம் மன்னித்து விடு "

என் மீது நீ கொண்ட
கோபத்தை சீக்கிரம்
மன்னித்து விடு
அழகாய் முத்தம்மிட்டு ... ஆழமாய் காதலி
அன்போடு என்னை அரவணை

" சுவாசத்தை நிறுத்த முடியுமா "

உன்னை நேசிப்பது சுவாசத்தை போல
சுவாசத்தை நிறுத்த முடியுமா ?

எழுதியவர் : Govarthini (20-Jun-17, 2:11 pm)
பார்வை : 141

மேலே