வரவிற்கு மேற்செலவு வாழ்க்கையதற்கு இன்னா - இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பாக்கள்

மெல்லாடை பெண்ணுக்கு மேலணிதல் இன்னாவாம்;
சொல்கேளா பெண்ணவளும் இல்லுக்கே இன்னா;
வரவிற்கு மேற்செலவு வாழ்க்கையதற்(கு) இன்னா;
உரித்தாகச் சொல்வேன் உனக்கு! 1

பெரும்பான்மை இல்லரசின் கீழ்வாழ்த லின்னா
பெருமூழல் செய்வோரைப் பேணலும் இன்னா
நயமில் மனையாளும் இன்னா;ஆங் கின்னா
தயவில்லா தன்நட்பும் தான்! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-17, 11:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

மேலே