காதல் தரும் வலிகள்

காதல் கனிந்துவரும் என்று நினைத்திருந்த போது
அவன் என் கண்ணெதிரில் வந்து நின்றான்
மன்மதன் இவந்தான்னா என்பது போல்; அவன்
கூறிய விழிகளின் பார்வை என் கண்களுடன் சேர்ந்து
என் இதயத்தை தொட்டது இன்ப உணர்வுகள் தந்தது
அப்படியே காதலும் தந்து அவன் நினைவில் அன்று முதல்
என் நெஞ்சம் பித்தாய் போனது அவனின்றி இனி
நான் இல்லை என்று ஆனது ; அப்படியொரு காதல் மயக்கம்

அவனும் நானும் அன்றுமுதல் கொஞ்சி குலாவி
காதல் பறவையாய்த் திரிந்த நாட்கள்
எத்தனையோ எத்தனையோ அத்தனையும்
இப்போது அவன் பிரிவில் நான் வாடும் போது
இன்பமான துன்பம் தந்து வாட்டுகின்றதே

காரணம் ஏதும் இல்லாது என்னை பார்க்கவும் இல்லாமல்
காணாமல் போய்விட்டான்: இன்றுவரை;
தொட்டு உறவாடிய என்னை நினைத்து கூட பார்க்காமல்
தனிமையில் என்னை வாடவிட்டு காதலித்த
அந்த நினைவுகளில் வாழ்ந்திடு நீ என்று நினைத்தானோ
தெரியவில்லையே -வருவான் வருவான் ஒருநாள்
நம் காதல் மெய்தான் பொய்யான வெறும் மோகம் அல்ல
என்று சொல்லி என்னை அணைத்து தன் வதுவையாய்
விரைவில் ஏற்றம்தந்து காதலுக்கு அர்த்தம் தந்து
வாழ வழி வகுப்பான் என்ற கனவில் வாழ்கின்றேன்
காதல் தரும் வலிகள் அத்தனையும் சுமந்து

ஆனாலும் ஒரு வேளை என் காதலன் இவன்
வாராமலே இருந்துவிட்டால் ...........அது எனக்கு தோல்வி
என் காதலுக்கு தோல்வி
காதலில் இடையில் வரும் பிரிவை தாங்கிக்கொள்ளலாம்
ஆனால் அந்த பிரிவே முடிவாய் இருந்தால்
தோல்வி தரும் வலியை தாங்கிக்கொள்ள என்
இதயம் இரும்பால் ஆனதல்லவே நா என் செய்வேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jun-17, 2:06 pm)
பார்வை : 109

மேலே